ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் நானே-அமைச்சர் நிமால் சிறிபால


ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பெயர் விஜயதாச ராஜபக்ச மற்றும் டலஸ்


அழகப்பெரும ஆகியோரது பெயர் முன்மொழியப்பட்டதாகவும், அதில் மிகவும் ததகுதியானவர் தான் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வர ஜனாதிபதி வேட்பாளராக தம்மையே முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.


காவியன்