எரிபொருள் விலை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்


விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 1 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதன்படி நேற்றிரவு (15) திருத்தம் அமுல்படுத்தப்படவிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

உலக சந்தையில் ஒரு கச்சா எண்ணெய் விலை தற்போது மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.