முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்!

 


மன்னார், முசலி பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் பாயிஸ் அவர்களின் வெற்றிடத்துக்கு, முசலி, புதுவெளியைச் சேர்ந்த S.அப்துர் ரஹ்மான் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


S.அப்துர் ரஹ்மான் அவர்கள், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் முன்னிலையில் நேற்று (23) தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.


இந்நிகழ்வில், தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.