மின் கட்டணம் திருத்தம் உள்ளிட்ட தகவல்களை கோருகிறது – IMF


தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.


zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன் இருதரப்பும் சாதகமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.



மின் கட்டண திருத்தம் மற்றும் கலால் சட்டம் தொடர்பான இந்த கலந்துரையாடல்களுக்கு தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தகவல்களை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.


சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஆலோசகர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களும் நேற்று கலந்துரையாடலில் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் புதன்கிழமை மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.