ஜனவரி 1க்கு பின் அரச ஊழியர்களின் நிலை

 

அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின்னர், 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.


அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக வரையறுப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை அமல்படுத்தும் சுற்றறிக்கை இன்று (14) வெளியிடப்பட்டிருந்தது.


அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், மேற்குறித்த எண்ணிக்கையிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவர் என்று அமைச்சு அறிவித்துள்ளது.