61,000 குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு 10,000 உதவித்தொகை


போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 61,000 குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா மானியம் வழங்கப்படும் என பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன தெரிவித்துள்ளார்.


உலக உணவுத் திட்டத்தின் கீழ் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும் என்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.