காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரிப்பு !

 


இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதுவரையில், இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை சுமார் 5,600ஆக காணப்பட்டதாக கூறப்படுகிறது.


எனினும், அண்மைய கணக்கீடுகளின் படி இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் இலங்கையில் தந்தத்தை உடைய யானைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.