சூரியவெவ பிரதேசத்தில் உள்ள 80% சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு

 

சூரியவெவ சுகாதார பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ இதனை வெளிப்படுத்துகிறார்.


சூரியவெவ வல்சபுகல கொஸ்வகாவ கிராம மக்கள் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சமூக கணக்கெடுப்பின் போதே இது தெரியவந்துள்ளது.


அவர் மேலும் தெரிவிக்கையில்; கிராமத்தில் வசிக்கும் 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சுகாதார அட்டைகளை நாங்கள் தனித்தனியாக சோதித்தோம். தற்போது முப்பது சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடும், ஐம்பது சதவீதமானோர் லேசான ஊட்டச்சத்து குறைபாடும், மீதமுள்ள இருபது சதவீதமானோர் ஊட்டச்சத்து நிலையை நெருங்கி உள்ளனர். மேலும் பல குடும்பங்களில் மூன்று குழந்தைகள் உள்ளனர். மூவரும் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.


கொழும்பில் இருந்து கிராமத்தைப் பற்றி பேசுவதை விடுத்து, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்குச் சென்று அவசர நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜீ.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்தார்.