இலங்கைக்கு சீனாவை விட அதிக கடன்களை வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.

அதில் 809 மில்லிய் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.

இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன் யூரியப உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவுடனான நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.

அதில் 809 மில்லிய் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.

இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன்  யூரிய உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியாவுடனான நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.