மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்


அரச கூட்டுத்தாபனங்களினால் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் செயலமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு நட்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்த நிறுவனங்களால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனியும் தாங்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.