உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

 


2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28ஆம் திகதி வௌியிடப்பட்டது.


இந்த பரீட்சையில் 272,682 பேர் தோற்றியதுடன் அதில் 171,497 பரீட்சாத்திகள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றனர்.