சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றத்தை வலியுறுத்தும் ஜனாதிபதி!*

சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றத்துக்கான அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதேநேரம், தற்போது அதிகரித்துள்ள மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதன்போது வலியுறுத்தியுள்ளது.


அத்துடன், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கு, வைத்தியர்களுக்கு விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.