எரிபொருள் கொள்வனவு குறித்த அறிவிப்பு


இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நாளை மறுதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலானது, தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை, எரிபொருள் விநியோகம் தொடர்பாக ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகள் உயர் மட்டத்தில் உள்ளன.

அண்மையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சரையும் சந்தித்தார்.

இலங்கையில் போக்குவரத்தை சீரமைக்க அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டது.

நாட்டின் தொடருந்து போக்குவரத்தை நெறிப்படுத்துவதற்கு சில புதிய தொடருந்து பெட்டிகளை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ரஷ்ய போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு ரஷ்ய அதிகாரிகளும் தங்கள் உடன்பாட்டை தெரிவித்துள்ளனர்.