இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மகன் பிணையில் விடுதலை!
கிரிபத்கொடை பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் புதல்வர் உள்ளிட்ட சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் வைத்து இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் புதல்வர், தனது ஆதரவாளர்களுடன் மாணவர்கள் இருவரை தாக்கியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சிற்கு சொந்தமான WP KX 8472 என்ற இலக்கமுடைய வாகனத்தில் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.