பிலிப்பைன்ஸில் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தையில்!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.


ஜப்பானுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தப் பயணத்தை நிறைவுசெய்து, நேற்று பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடைந்தார்.


அத்துடன், மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது ஆளுநர் கூட்டத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளார்.


பிலிப்பைன்ஸ் விஜயத்தை நிறைவுசெய்து, ஜனாதிபதி மீண்டும் நாளை(30) நாடு திரும்பவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.