இரவு எட்டு மணிக்கு பின்னர் பணத்தை செலவு செய்ய கொழும்பில் ஒரு இடமும் இல்லை ..
இரவு பத்து மணிக்குப் பிறகு கொழும்பு மாநகரம் மயானம் போல் இருப்பதாகவும் அங்கு ஒன்றும் இல்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.


மேலும் அங்கு பணம் செலவழிக்க இடமில்லை எனவும், சுற்றுலா பயணிகளால் பணத்தை செலவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பணத்தைச் செலவிடுவதற்கு பொழுதுபோக்கு நிறுவனங்கள் அதற்கான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சுற்றுலாப் பயணிகள் தங்கள் பணத்தை தவறாமல் செலவிடும் வகையில் நிகழ்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)