எலிசபெத் ராணிக்கு ஜனாதிபதி இன்னும் சற்று நேரத்தில் அஞ்சலி!

 

மறைந்த பிரித்தானிய ராணி எலிசபெத் அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு 7.30 முதல் 7.40 வரையான காலப்பகுதியில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. 


இலண்டன் நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தவுள்ளார். 


ஜனாதிபதியுடன் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க மற்றும் பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.