ஜனாதிபதிக்கு மொட்டு எம்.பி கோரிக்கை கடிதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களின் மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், விவசாயிகளின் நெல் அறுவடையை உத்தரவாத விலையில் விரைவாக பெற்றுக் கொள்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அதற்கான ஏற்பாடுகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.