நுரைச்சோலை செயலிழப்பு... மின்வெட்டு நேரம் இன்று முதல் அதிகரிப்பு - வெளியானது அறிவிப்பு

 




செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வர 3 அல்லது 5 நாட்கள் செல்லும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.


டுவிட்டர் பதிவொன்றின் 

ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மின்உற்பத்தி நிலையங்களின் பயன்பாட்டு நிலைமை குறித்து முகாமைத்துவப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்


இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ள நிலையில், இன்று (செப்.27) மின்சார தடையை மூன்று மணித்தியாலங்கள் வரை அதிகரிப்பதற்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


இதன்படி, 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களுமாக காணப்பட்ட மின்வெட்டு நேரம், இன்று (27) முதல் மூன்று மணித்தியாலம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.