பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை!


பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என  திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கல்வி அமைச்சு, குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் பிரதிகள், 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என குறிப்பிட்ட அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதாக, திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  


இதனால் பொதுமக்கள் அவதியுறுவதாகவும், தெளிவான சான்றிதழ் பிரதி இருக்குமாயின் மீண்டும் புதிய பிரதியை பெறவேண்டிய அவசியமில்லை என்றும் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.