நீண்ட நாட்களாக, திருமண வைபவங்களில் நுழைந்து உணவு உட்கொண்டு வந்த நான்கு இளைஞர்கள் கைது #இலங்கை



நீண்ட நாட்களாக, திருமண வைபவங்களில் நுழைந்து உணவு கொண்டு வந்த நான்கு இளைஞர்கள் கைது

மாத்தறை- வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில், பலவந்தமாக நுழைந்து உணவு பெற்றுக்கொள்ள முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


16, 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இந்த இளைஞர்கள் பல நாட்களாக வெலிகம நகர மண்டபத்தில் நடைபெறும் திருமண வைபவங்களில் வலுக்கட்டாயமாக நுழைந்து உணவு உட்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை, வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது 4 இளைஞர்கள் பலவந்தமாக அங்கு நுழைந்து உணவு பெற முயற்சித்துள்ளனர்.


இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர்கள் இது குறித்து நகர சபை தலைவர் ஜி.ஜி.எச். யமுனா காந்திக்கு அறிவித்தனர்.


அதன் பின்னர், காவல்துறை அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர்கள் வெலிகம பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.


நான்கு இளைஞர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து, குறித்த நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.