இலங்கை திறந்த பல்கலைக்கழகம். முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத ஒரு பக்கம்..

 

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் கிடைக்காததால் எமது மாணவர்கள் மொத்தமாகவே கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர். பல்கலைக்கழகம் மட்டுமே உயர் கல்விக்கானநிறுவனம் அல்ல.அதையும் தாண்டிவாய்ப்புகள் அனேகம்உள்ளன. க.பொ.த,உயர் தரத்தில் தோற்றி சித்தியடையும் மாணவரைகளில் சுமார் நான்கு வீதமானோரே பல்கலைக்கழக அனுமதி பெறூகின்றனர்.96வீதமானோர் பல்கலைக்கழக வாசல்கள் வரை சென்று திரும்புகின்றனர்.


இத்தகைய மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்துஅச்சப்படுகின்றனர் ஆனால், அவர்கள் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. தத்தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு போட்டித் தன்மையுள்ள தொழிற் சந்தைக்கு தம்மை தயார்படுத்துவதற்கானஅனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு நிறுவனமாக இலங்கை திறந்து பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.


நாட்டிலுள்ளள 16 பல்கலைக்கழகங்களில் இல்லாத பல வாய்ப்புக்கள் திறந்த பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன.  இதன் கற்கை நெறிகள் 650௧ மேல் உள்ளமை பலருக்கும் தெரியாது. குறிப்பாக, நிறுவன ரீதியான வழிகாட்டல்கள் இல்லாத முஸ்லிம் மாணவர்கள் திறந்து பல்கலைக்கழகம் குறித்து எத்தகைய மனப்பாங்கினை கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நுகேகொடை, நாவல வீதியில் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏனைய பல்கலைக்கழகங்களை விட இது முற்றிலும் வித்தியாசமானது. 16 பல்கலைக்கழகங்களிலும் அனுமதி பெறாத மாணவர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இங்கு தமது உயர் கல்வியைப் பெற்று வருகின்றனர்.


இப்பல்கலைகழகம் வழங்கும் கற்கை நெறிகளை அறிமுகப்படுத்த முன்னர் இது பற்றிய சில அடிப்படை தகவல்களை முன்வைப்பது பொருத்தமானது. 1978ம் ஆண்டின் 16 ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின்படி 1980 ம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டிலுள்ள ஏனைய 16 பல்கலைகழகங்களின் சான்றிதழ்களுக்கு சமனான அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது. கற்பித்தலிலும் சில வேறுபாடுகளை அவதானிக்கலாம். வகுப்பறை விரிவுரைகளுக்கு  மேலதிகமாக தொலைக் கல்வி முறையிலும் மாணவர்களுக்கு விரிவான அறிவை வழங்கி வருகின்றது. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 16 பல்கலைக்கழகங்களிலும் ஒன்று எனவும் இதனைக் கருதலாம்.


மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகள், மாணவர்களது சுய தேடல் முயற்சிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள், மற்றும் வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் என்பன விரிவான , வினைத்திரனுள்ள கற்றலை உறுதி செய்கின்றன. திறந்த பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொண்ட மாணவர்கள் எவ்வித சட்ட ரீதியான தடைகளுமின்றி ஒரே நேரத்தில் அல்லது சமகாலத்தில் ஏனைய அரச பல்கலைக்கழகங்களில் வேறு கற்கை நெறிகளையும் தொடர்வதற்கு அனுமதியுள்ளது.


திறந்த பல்கலைக்கழகத்திற்கு என்றே உரித்தான கற்றல் -கற்பித்தல் முறைகள் மாணவர்களின் பல்கலைக்கழக கனவை நனவாக்கும் ஆற்றல் உள்ளவை.18 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கை பிரஜையும் தம்மை இப்பல்கலைகழகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். (தற்போது வெளிநாட்டவர்களுக்கும் இடம் ஒதூக்கப்படுகின்றது). திறந்த என்ற பதம் கற்றலுக்கு விரிந்த சாதகத் தன்மையை பிரதிபலிக்கின்றது. வயது கட்டுப் பாடுகள் ஏதுமின்றி நேரடியாகவோ தொலைக்கல்வி முறையிலோ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பை அது தருகின்றது.


ஃ*  தமது விருப்பத்திற்கு ஏற்ப, தமது தேவைகளுக்கு ஏற்ப பாடங்களை தெரிவு செய்து கொண்டு கற்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.


ஃ*  மாணவர்கள் தமது தொழிலைச் செய்து கொண்டே கல்வி நடவடிக்கைகளிலும் எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளலாம்.பகுதி நேர கற்கை நெறிகள் இதற்கு உதவுகின்றன. இதனால் கற்றலுக்கு தடையாகவுள்ள பொருளாதார சுமைகள் நீக்கப் படுகின்றன.


ஃ*  தொலைக் கல்வி முறையினால் தற்செயலாக விரிவுறைகளுக்கு சமூகம் தர முடியாமல் போனாலும் வீட்டிலிருந்தே மேலதிக நேரம் ஒதுக்கி கற்கலாம்.


ஃ*  எமது தேவைகளுக்கு ஏற்ப கற்கை நெறிக்காக கால எல்லைகளையும் நாமே தீர்மானிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக கால எல்லையை பிற்போட முடியும். அதே போன்று எமது கல்வித் தகைமைக்கு ஏற்ப சில பாடங்களை தவிர்ந்து கொள்ளவும் முடியும்.


ஃ*  இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமையகம் நாவலயிலும் பிராந்திய நிலையங்கள் கொழும்பு, கண்டி, மாத்தளை ,யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு உட்பட 18 உப கற்கை நிலையங்களும் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.


ஃ*  சாதாரணமாக 10 ஆண்டுகள் கராஜில் பணியாற்றிய அனுபவமுள்ள ஒருவர் சிவில் பொறியியலாளராக கற்று வெளியேறுவதற்கான வாய்ப்பை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்றது.


ஃ*  கடந்த 3 1/2 தசாப்தமாக தமது எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் முழுமையாக நிறைவேற்றிய கல்வி நிறுவனமாக திறந்த பல்கலைக்கழகம் கருதப்படுகின்றது. ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்று பகிடிவதை, மாணவர் குழுக்களுக்கிடையிலான வன்முறைகள் எதுவுமே இங்கு நிகழ்வதில்லை.மிக அமைதியான முறையில் ஆரோக்கியமான கல்விப்பணியை திறந்த பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்றது.


ஃ*  தற்போது 40 000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு கற்கை நெறிகளை கற்று வருகின்றனர். தொழில் மையப் பாடங்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப் படுகின்றது. கல்விப் பீடம்  மானிடவியல்  , சமூக விஞ்ஞான பீடம் , இயற்கை விஞ்ஞான பீட, பொறியியல் தொழில்நுட்ப பீடங்கள் என்று நான்கு பிரதான பீடங்கள் இயங்கி வருகின்றன.


ஃ*  இவற்றின் கீழ் 20 துறைகளும் 600 க்கும் மேற்பட்டகற்கை நெறிகளும் உள்ளன. சாதாரண டிப்லோமா முதல் உயர் டிப்லோமா , ஆரம்ப பட்டப்படிப்பு, பட்டப் பின் டிப்லோமா மற்றும் பட்டப் பின் கற்கை என பல்வேறு தராதரங்களுடன் இயங்குகின்றது.


ஃ*  ஆசிரியர் கல்வி , முன்பள்ளிக்கல்வி,மொழி, சட்டம், முகாமைத்துவம்,, இயற்கை விஞ்ஞானம் ,சுற்றாடல் கல்வி, தொடர்பாடல் என்பன முக்கிய பாடநெறிகளாக உள்ளன.


 Ahamed Zulfikar

ஆசிரியர்