பாராளுமன்றில் ஒரு உறுப்பினரை வைத்துக்கொண்டு ரனிலால் ஜனாதிபதியாக முடியும் என்றால் ஏன் சுதந்திர கட்சிக்கு மீள் எழ முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.
சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
42 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசை விட்டு வெளியேற மொட்டு கட்சியின் சூழ்சிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.