இலங்கை நிலக்கரி நிறுவனம் விசேட அறிவிப்பு!

 


நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உடனடியாக கொள்வனவு செய்வதற்கான டெண்டர் கோரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். 


எவ்வாறாயினும், ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் சந்தர்ப்பவாத நிபுணர்களின் கொள்முதல் நடைமுறைகளுக்கான தலையீட்டால் நிலக்கரியை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி உருவாகியுள்ளதாக மின்சார தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 


எந்த வகையிலாவது நிலக்கரி ஆலையில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதனை சமாளிக்க களனிதிஸ்ஸ கூட்டு மின் உற்பத்தி நிலையத்தை உரிய முறையில் தயார்படுத்துமாறு சங்கம் அரசாங்கத்திடம் மேலும் கோரியுள்ளது.