இலங்கையில் நேற்றிரவு பதிவான சுவாரஸ்ய சம்பவம். காதலியை பார்க்க செல்ல பஸ்ஸை கடத்திய இளைஞன்


காதலி சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைத்தவுடன் சந்திக்க செல்வதற்கு வாகனமில்லாமல் பேருந்து நிலையத்திலிருந்த பஸ்ஸை கடத்திச்சென்ற 15 வயது சிறுவன் கைது


பிலியந்தலை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை கடத்திச் சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மத்தேகொட சித்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


பேருந்துகளின் சாரதிகள் ஆசிய கிண்ண இறுதி கிரிக்கட் போட்டியை காண பேருந்து நிலையத்தின் ஓரத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்குச் சென்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​ பேருந்து ஒன்று அங்கு இல்லாததை அவதானித்துள்ளனர்.


இதனையடுத்து பேருந்து சாரதிகள் உடனடியாக இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


பொலிஸார் உடனடியாக விசாரணையை ஆரம்பித்தனர்.

பல கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளையும் பொலிஸாரால் பெறமுடியவில்லை. இதனையடுத்து .


பிலியந்தலை பொலிஸ் நிலையத்தின் அறிவித்தலின் பிரகாரம், பல வீதித் தடைகள் போடப்பட்டன .

நள்ளிரவு 12.30 மணியளவில் கெஸ்பேவ – பிலியந்தலை வீதியின் வீதித்தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அப்பகுதியினூடாக பயணித்த பேருந்து மீது சந்தேகம் ஏற்பட்டு அதனை நிறுத்திள்ளனர்.


அது, ​​கடத்தப்பட்ட பேருந்துதான் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர். விரைந்து செயல்பட்ட பொலிஸார், பேருந்தை நிறுத்தி, தப்பி ஓட முயன்ற சிறுவனை துரத்திச் சென்று கைது செய்தனர்.

பின்னர், அவர் தனது காதலியை பார்க்க சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பொலிஸாரிடம் சிக்கியது தெரியவந்தது.

அப்போது நடந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.


நேற்று இரவு 8 மணியளவில் மொரகஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் தனது காதலி தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதன்படி, காதலியை சந்திக்க பேருந்தில் பயணிக்க பேருந்து நிலையத்திற்கு வந்ததாகவும் அப்போது பேருந்துகள் இல்லாததால் செய்வதறியாது தவித்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.


பின்னர் பேருந்து ஒன்றில் சாவி இருந்ததால் அதனை இயக்கி மொரகஹேன பகுதியில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றதாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

சந்தேக நபர் இதற்கு முன்னரும் தனது காதலியை சந்திப்பதற்காக பேருந்து ஒன்றை கடத்திச் சென்றுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது