விவசாயத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் – விவசாய அமைப்புகள் வலியுறுத்து!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உடனடியாக பதவி விலக வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்காததாலேயே அவர் இவ்வாறு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயத்துறை அமைச்சு உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.