காத்தான்குடி நகர சபைக்கான புதிய உறுப்பினராக கமால்தீன் நியமனம்!


காத்தான்குடி நகர சபைக்கான நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் புதிய உறுப்பினராக எம்.ஐ.எம். கமால்தீன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர், நேற்று (06) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.


காத்தான்குடி நகர சபைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் சுழற்சி முறையில் உறுப்பினர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ், புதிய உறுப்பினராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்  எம்.ஐ.எம். கமால்தீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நகர சபை உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான புதிய உறுப்பினரைத் தெரிவு செய்யும் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைவாக  இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.