தேசிய பேரவை யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

 


தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.


ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இந்த யோசனை இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும்


பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற அமர்வு இன்று 9.30க்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.


இன்றைய அமர்வின் போது, ஒரு மணிநேரம், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.


இதேவேளை, பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.