விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதால் அரசாங்கம் இலாபமடைகிறது... எரிபொருள் விலையை குறைக்க முடியாது ; எரிசக்தி அமைச்சர்


விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதில் அரசாங்கம் இலாபமடைந்து வருவதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


பாராளுமன்றத்தின் நேற்றைய (06) அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.

எரிபொருள் விலைகளை ஒரே தடவையில் குறைக்க முடியாது.

எரிபொருள் விலை உலக சந்தையில் குறையும் அதே தினத்தில் உள்நாட்டிலும் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என்றார்.


தற்போதுள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.


இதனால் அரசாங்கத்துக்கு இலாபம் கிடைக்கின்றது என்றார்.