குறைந்த விலைகளில் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் லங்கா சதொச நிறுவனம்!


ஹட்டன் சதொச கிளையானது தோட்ட மக்களுக்கு கோதுமை மாவை கிலோ ஒன்று ரூ. 310 சில்லறை விலையில் விற்பனை செய்கிறது.

கடந்த சில வாரங்களாக ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் முக்கிய நகரங்களில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஹட்டன் சதொச கிளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு கோதுமை மா மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வரம்பில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ ரூ.185, நாட்டு அரிசி ரூ.194, இலங்கை வெள்ளை அரிசி ரூ.210, இலங்கை நாட்டரிசி ரூ.218, சிவப்பு அரிசி ரூ.210, பொன்னி சம்பா ரூ.194, பழுப்பு (சிவப்பு) சீனி ரூ.310, வெள்ளை சீனி ரூ.279, சிவப்பு பருப்பு ரூ.429, நுவரெலியா உருளைக்கிழங்கு சில்லறை விலை ரூ.398, வெங்காயம் ரூ.175, நெத்தோலி ரூ.1350 என விற்பனை செய்யப்படுகிறது.

சதொச கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரம்பற்ற முறையில் வெளியிடப்படுவதால், நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வருவதாக சதொச கிளையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.