விசேட பெரும்பான்மை அவசியம்


22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், பாராளுமன்றத்துக்கு  அறிவித்துள்ளது.


பாராளுமன்றத்தின் இன்று (06) சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இதனை அறிவித்தார்.