கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதிய கார்.

 

இன்று (15) மாலை 5.10 மணியளவில் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதம் யாகொட நிலையத்திற்கு அருகில் சாரதி கவனக்குறைவாக செலுத்தி வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து இடம் பெற்றவுடன் குறிப்பிட்ட கார் புகையிரதத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளது.


 இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.