மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி – நாமல் தகவல்
மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வன்முறையை முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சட்டத்தை பிரயோகித்திருந்தால், இன்று இதனை விட நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். எனினும், ரணில் விக்ரமசிங்க அதனை மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, அமைப்பு முறைமையை (System) மாற்றுவதாகக் கூறி ஆட்களை மாற்றியதுதான் தமது கட்சி செய்த தவறு எனவும் குறிப்பிட்டார்.
.
அதேவேளை, புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் கூறினார்.