நட்டத்தை ஈடுசெய்ய கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை


சீன உர கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தை, அந்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து அறவிடுமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.


உரக்கப்பல் தொடர்பில் எவ்வித காப்புறுதியும் இன்றி நிதி விடுவிக்கப்பட்டமையினால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீள பெறுமாறு கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து,  நட்டத் தொகையை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளார்.


96,ooo மெட்ரிக் தொன் சேதன பசளை கொள்வனவு செய்யப்பட்ட முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் கணக்காய்வாளர் நாயகம் இந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார்.