-ரிம்சி ஜலீல்-
பரகஹதெனிய தேசிய பாடசாலையின் புதிய அதிபராக கடந்த 04-08-2022 அன்று பொறுப்பேற்றுள்ளார் இக்கல்லூரியில் நீண்ட காலம் சேவையாற்றிய அதிபரும், முதலாம் தர அதிபருமான அப்துர் ரஹ்மான்.
இவர் மிரியம்பிடியை சேர்ந்த சேகு முகம்மது இப்ராஹீம் - சேகு இஸ்மாஈல் சைனப் தம்பதியின் பிள்ளையாவார். ஆரம்பக் கல்வியை மிரியம்பிடிய முஸ்லிம் வித்தியாலயத்திலும். மடிகே மித்தயாலய முஸ்லிம் வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியையும். க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் வரை குருநாகல் ஸாகிரா கல்லூரியிலும் கற்று பின்னர் தனது கலைமாணி பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 1990 ஆம் ஆண்டு ஆசிரியராக கடமையேற்றார் .
முதன்முதலில் ஹேனகெதர முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையேற்ற இவர் அங்கு 5 வருடங்களும் மேடிகே அனுக்கன முஸ்லிம் வித்தியாலயத்தில் ஒரு வருடமும் அசனாகொடு முஸ்லிம் வித்தியாலயத்தில் சுமார் 6 மாதமும் அஹட்டுமுல்ல முஸ்லிம் மகா வித்தியாளயத்தில் 16 வருடங்களும் தொடர்ச்சியாக ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் சேவையில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று தெரிவு செய்யப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக பரகதெனிய தேசிய பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றினார்.
அங்கு 7 வருடங்கள் கடமையாற்றிய இவர் 2013 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகப் பிரிவில் 15 மாணவர்கள் 3A சித்தியை பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார்கள். இந்த சாதனையை இன்று வரை இலங்கையில் எந்த முஸ்லிம் பாடசாலையும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2015 ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையில் 6 வருடங்கள் தொடர்ச்சியாக கடமையாற்றியுள்ளார்.
பின்னர் மதீனா தேசிய பாடசாலைக்கு இடமாற்றத்தில் சென்று அங்கு ஒரு வருடம் அதிபராக கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீண்டும் பரகஹதெனிய தேசிய பாடசாலையின் அதிபராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஐ. அப்துர்ரஹ்மான்.
ரிம்சி ஜலீல்
ஊடகப் பிரதானி
சிலோன் முஸ்லிம் இணையத்தளம்.