காட்டுக்கு தீ வைத்த மாணவர்களுக்கு மரங்களை நடும் படி உத்தரவிட்டது பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்.


எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் வழக்கத்திற்கு மாறான தண்டனை வழங்கியுள்ளது.


சந்தேகநபர்களை  தலா 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் முதலில் உத்தரவிட்டது. .


அதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தலா 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


சனிக்கிழமை (24) எல்ல பிரதேசத்தில் உள்ள காப்புக்காடு ஒன்றிற்கு தீ வைத்த 16 மாணவர்களும் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


16 வயதுடைய சந்தேகநபர்கள் பதுளை மற்றும் பசறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள். வன காப்பகத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய குழுவினர், அதன்பிறகு அப்பகுதியில் தீ வைத்துள்ளனர்.