பெரிய வெங்காய அறுவடையில் வீழ்ச்சி!


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சிறு போகத்தில் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் அறுவடை 10 இலட்சம் கிலோ கிராமினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


கடந்த வருடத்தின் இந்த காலப்பகுதியில் சிறு போகத்தில் 10 தொடக்கம் 15 இலட்சம் கிலோ கிராம் பெரிய வெங்காயம் நாளாந்தம் கிடைத்ததாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.


எனினும், இந்த தடவை சுமார் 2 இலட்சம் கிலோ கிரோம் பெரிய வெங்காயம் மாத்திரமே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் கிடைப்பதாக அவர் தெரிவித்தார்.


ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் உற்பத்திச் செலவு 250 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராமிற்கு 80 தொடக்கம் 120 ரூபா வரையே கிடைப்பதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க தலைவர் சாந்த ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.