22ஆவது சட்டமூலம் குறித்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் விவாதம்


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


சற்றுமுன்னர் நிறைவடைந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.


மேலும் 2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு மீதான விவாதத்தை 18ஆம் திகதி நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.