5,320 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது


இந்தியா மற்றும் இலங்கைக்கு விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 200 கிலோ ஹெரோயினுடன் இந்தியாவின் கேரளாவிற்கு சொந்தமான கடற்பரப்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அந்த போதைப்பொருள் கையிருப்பின் மதிப்பு சுமார் 1,200 கோடி இந்திய ரூபாய் (5,320 கோடி இலங்கை ரூபாய்) என தெரிவிக்கப்படுகிறது. 


இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இந்தியாவின் கொச்சி கடற்பகுதியில் ஹெரோயின் ஏற்றிச் சென்ற கப்பலைக் கைப்பற்றியுள்ளனர். 


கடத்தல்காரர்கள் ஹெரோயினை கடலில் வீசி தப்பிச் செல்ல முயன்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


குறித்த கப்பலில் 6 ஈரானிய பிரஜைகள் தங்கியிருந்த நிலையில், 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஹெரோயின், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு கொண்டு வரப்பட்டு ஈரானிய கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது. 


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஹெரோயினை இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி கப்பலுக்கு மாற்றும் திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.