பாராளுமன்ற மலசலக்கூடத்தில் ‘சமைத்த கோழி’

பாராளுமன்றத்தில் உள்ள மலசலக்கூடங்களில், அதிகளவான சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, முறையான உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார்.


அங்குள்ள மலசலக்கூடங்கள் பலவற்றின் போச்சிக்களுக்குள்ளே இவ்வாறு சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் 4ஆம் திகதியன்று மீ்ட்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், பொதுவான சோதனைக்கு அப்பால், பாராளுமன்றத்துக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பணியாளர்களின் பொதிகளை விசேடமாக சோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.


பாராளுமன்றத்தில் சமைத்த மற்றும் சமையலுக்கான உணவுகளை, வெளியே கொண்டுச் செல்வது அதிகரித்துள்ளமையால் அவை தொடர்பில் விசேட சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.