மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க விசேட கெசட் அறிக்கை!



செப்டம்பர் மாதம் 23ம் திகதி மதியம் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விசேட கெசட் அறிக்கை வெளியிட்டார்

இவ் கெசட் அறிக்கையில் கொழும்பு மாவட்டத்தின் 6 பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்
இதன் பின்னர் 24ம் திகதி இளைஞர்கள் சங்கம் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருந்தனர் இப் போராட்டத்திற்கு சில மணி நேரங்களிற்கு முன்னரே இவ் அறிக்கை வெளியிடப்பட்டது.

செப்தம்பர் 24ம் திகதி நீதிமன்றத்தில் இவ் கெசட் அறிக்கையை தடை செய்தனர் நீதிமன்றத்தில் கூறியது நீதிக்கு விரோதமான செயல் என்று

24ம் திகதி மேற்கொண்ட போராட்டத்தில் போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்
7பேரிற்கு அதிக தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது

இதன் பின்னர் 26ம் திகதி மேல் நீதிமன்றத்தில் கூறியது இவ் உயர் பாதுகாப்பு வலயம் என்ற கெசட் அறிக்கை பிழையானது அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்வது சாதாரண மக்களின் உரிமைகள்

அன்று கோடாபய ராஜபக்ஷ அவர்கள் போலவே ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ராஜபக்ஷ பாதையிலே செல்கிறார் என்று

அன்று வடக்கில் யுத்தம் ஏற்பட்ட காலங்களில் நாட்டில் பல இடங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது
அதாவது காங்கேசன்துறை போன்ற பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது பல ஏக்கர் நில பரபரப்பு உடைய நிலப்பரப்பை ஏன் உயர் பாதுகாப்பு வலயமாக அமைத்ததன் காரணம் என்று கேட்ட போது அதற்கு சரியான முறையில் பதில் இல்லை
அதே போல இன்றும் இவ்வாறு மேற்கொள்ள காரணம் என்ன

இவ்வாறு மேற்கொள்ளவதால் மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்பு மாத்திரமே உண்டாகும்

மற்றும் வடக்கு பிரதேசம் யுத்தத்தில் பாரிய அளவு பாதிக்கப்பட்டிருந்தது
இன்று நமக்கு தெரியும் வெளி நாடுகளில் இருந்து அவர்களின் உறவுகள் நலன் விரும்பிகள் டொலர்கள், யூரோக்கள் வழங்குகிறார்கள் என்று
இருப்பினும் அனைவருக்கும் இவ் வாய்ப்பு அமைவது இல்லை

அதே போல நாளுக்கு நாள் மக்களின் தேவைகள் விலை உயர்வு அதிகரித்து வருகிறது
இருப்பினும் யாழ்ப்பாண மாவட்ட மக்களிற்கு மற்றய பிரதேசங்களை விட விலை வாசிகள் உயர்வாக காணப்படுகிறது

இதனால் மக்களின் வாழ்வாதாரம் கல்வி என்பன பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொருளாதார பிரச்சனை என்பன அதிகரித்துள்ளது

இதனால் அரசாங்கத்திற்கு கூறுவது அன்றய நாளிற்கு சாப்பிட முடியாத மக்களிற்கு உணவு வழங்குங்கள்
இப் பிரதேசங்களில் ஏற்பட்டும் பிரச்சனையிற்கு தயவு செய்து தீர்வு காணுங்கள்