கோப் குழு மற்றும் கோபா குழு உறுப்பினர்கள் நியமனம்கோப் குழு மற்றும் கோபா குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இன்று காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான உறுப்பினர்களை அறிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


அதன்படி, 27 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


எனினும், கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.