டெலிகொம் விற்கப்பட்டால் 3000 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டால், சுமார் மூவாயிரம் ஊழியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகளை இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனவும், இவற்றில் சில சேவைகளை தற்போது தமது நிறுவன ஊழியர்களே செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஹேமந்த நெத்திகுமார தெரிவித்துள்ளார்.


எனினும், தொலைத்தொடர்பு நிறுவனம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி, ஒன்லைன் முறையின் மூலம் சேவைகளை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..


அப்படி நடந்தால் தற்போது பணியில் இருக்கும் மூவாயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் வேலையிழப்பார்கள்.


ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா வைத்தியசாலையில் அரசாங்கத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் நாற்பத்தொன்பது வீதமான பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஐநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்க தயாராக உள்ளன.