உபகரணங்களின் பற்றாக்குறையால் 35,000 மின் இணைப்புகள் நிலுவையில் உள்ளன: இந்திக அனுருத்த


இலங்கை மின்சார சபைக்கு தேவையான உபகரணங்களின் பற்றாக்குறையால் காத்திருப்போர் பட்டியலில் 35,000 க்கும் மேற்பட்ட புதிய மின் விநியோகங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.


15,000க்கும் மேற்பட்ட புதிய மும்முனை இணைப்புகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன என்றார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மின் தட்டுப்பாடு காரணமாக புதிய மின்சார இணைப்புகளை மின்சார சபை வழங்காததால் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


IMF நிதி கிடைத்துள்ளதால், தேவையான கருவிகள் மற்றும் மின்மாற்றிகள் போன்ற உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கடன் கடிதங்கள் (LCs) திறக்கப்படுவதால், புதிய இணைப்புகளை வழங்கும் செயல்முறையை இலங்கை மின்சார சபை விரைவுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்