காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலிகள் பங்கேற்றிருந்தனர் – எஸ்.பி

 


காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்தார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அத்துடன் காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரத்தை தாம் அறிவதாகவும் குறிப்பிட்ட அவர், தான் அதனை பகிரங்கப்படுத்த மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.