நீதிமன்றத்தை நாட பஃப்ரல் தீர்மானம்


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படாமை குறித்த விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) அறிவித்துள்ளது.


வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் விடுவிக்காதிருப்பது,  நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


தேர்தல் நிதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கும் நிதி அமைச்சிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என்றும் எதிர்வரும் சில தினங்களில் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திடம் விடயங்களை முன்வைக்கவுள்ளதாக  பஃப்ரல் குறிப்பிட்டுள்ளது.