"இலக்கிய உலகின் அமைதியான ஆளுமை ஆசுகவி அன்புடீன்" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


ஜனரஞ்சகக் கவிஞர் ஆசுகவி அன்புடீனின் மறைவு இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல மானிடச் சமூகத்துக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 


அன்னாரின் மறைவு குறித்து, அவர் வௌியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


"கவிஞர்களின் வாழ்நாட்கள், பல தடங்களிலும் புரட்டிப்பார்க்கப்படுவதுண்டு. அந்தவகையில், ஆசுகவி அன்புடீனின் ஆளுமைகளையும் பல கோணங்களில் நோக்கலாம். அன்பு, அடக்கம் மற்றும் மானிடம் என்பவைதான் அவரது இலக்கியத்தை இலங்கச் செய்தது. 


மிகப் பெரிய புலமையாளரான ஆசுகவி, இலக்கிய உலகில் அடையாளங்காணப்பட்ட விதத்திலும் ஒரு அமைதியிருந்தது. எழுத்துக்களால் எதையும் சாதிக்க இயலுமென்ற தைரியம் அவரது இலக்கியத்தில் இழையோடியிருந்தது. 


ஏட்டில் எழுதப்பட்டவற்றை மீறி இவ்வுலகில் எதுவும் நடந்ததில்லை. அவ்வாறுதான் ஆசுகவியின் ஆத்மாவும் இறைவனின் தவணைக்குட்பட்டு எம்மை விட்டுப் பிரிந்துவிட்டது. 


அவரின் இழப்பால் துயருறும் சகலருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையைக் கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்பதுடன், அன்னாரின் ஈருலக வெற்றிக்கும் பிரார்த்திக்கின்றேன்...!"