மஹிந்த ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதற்கமைய, ஏப்ரல் 20 முதல் 30 வரையில் இவ்வாறு வௌிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவை விடுத்துள்ளது.


அவரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.


கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையே இவ்வாறு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.