🔴பஸ் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாளாதில் மூவர் உயிரிழந்த சோகம்.


ஹம்பாந்தொட்டையில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாளாதில் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கதிர்காமம் நோக்கி சென்ற பஸ் ஒன்றும், எதிர்திசையில் வந்த லொறி ஒன்றும் மோதிக் கொண்ட இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர்.


இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மற்றுமொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹம்பாந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டள்ளனர்