கட்டுநாயக்காவில் முதன்முறையாக தரையிறங்கிய விமானம் : வாரத்தில் மூன்று நாட்கள் சேவை




சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ட்ரீம் லைனர் நேற்று அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக தரையிறங்கியது.


ஜப்பானிய கேரியர் ஆல் நிப்பான் ஏர்லைன்ஸுடன் இவ்விமானம் 787 ஒக்டோபர் 2011 இல் சேவையில் நுழைந்தது.


“இந்த விமானம் நேற்று முதல், வாரத்தில் நான்கு நாட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் சிங்கப்பூரிலுள்ள சாங்கி விமான நிலையத்திற்கும் இடையில் நேரடி விமான சேவையில் ஈடுபடவுள்ளதாக Aitken Spence நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் வசந்த குடலியனகே தெரிவித்துள்ளார்.


Aitken Spence சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இலங்கை முகவரானது ஞாயிறு, புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளை நடாத்த திட்டமிட்டுள்ளது.


இந்த விமானம், ஒக்டோபர் முதல் வாரத்தில் ஏழு நாட்களும் கொழும்பு மற்றும் சாங்கி இடையே சேவையில் இருக்கும்.


787-10 ட்ரீம்லைனர் சூப்பர் திறனுள்ள 787 குடும்பத்தின் சமீபத்திய உறுப்பினராகும்.


53 வருடங்களாக தொடர்ச்சியான சேவையை வழங்கி வரும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ், இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு, இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை வலுப்படுத்தவும் இந்த சமீபத்திய விமானத்தின் மூலம் பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக குடலியனகே தெரிவித்தார்.